ஆன்மிகம்
விநாயகருக்கு தாலி கட்டும் வழிபாடு
விநாயகருக்கு தாலி அணிவிக்கும் வழிபாடு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் நடக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தாலி பெண்களுக்கு உரிதானது, என்றாலும் மதுரையில் உள்ள விநாயகருக்கு, தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் கன்னிப் பெண்கள். இந்தச் சடங்கு மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலில் நடக்கிறது.
இந்த ஆலயத்திற்கு வரும் கன்னிப்பெண்கள், தங்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளைத் தாலிக் கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவிக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருக்கு தாலி கட்டி பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷம் நீங்கி நல்ல கணவர் அமைவார் என்பது நம்பிக்கையாகும்.