ஆன்மிகம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-05-31 11:09 IST   |   Update On 2017-05-31 11:09:00 IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே எசனூரில் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவசக்தி விநாயகர், வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், திரவுபதி அம்மன், மகா மாரியம்மன், கிருஷ்ண பகவான், அய்யனார், வீரனார், கருப்பனார், தீப்பாஞ்ச நாச்சியார், சப்த கன்னிகள் போன்ற சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

இந்நிலையில் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்து கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி யாகம், பூர்ணாகுதி நடந்தது. இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், கோ பூஜை, வாஸ்துசாந்தி, முதல் கால யாக பூஜை நடந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடந் தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 6 மணிக்கு சொர்ணபுரீஸ்வரர் கோவில் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவசக்தி விநாயகர், வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், திரவுபதி அம்மன், மகா மாரியம்மன், கிருஷ்ண பகவான், அய்யனார், வீரனார், கருப்பனார், தீப்பாஞ்ச நாச்சியார், சப்த கன்னிகள் கோவில் கலசங்கள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

Similar News