ஆன்மிகம்
அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் பிரசித்திப்பெற்ற அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் பிரசித்திப்பெற்ற சவுந்தரநாயகி உடனுறை அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று முன்தினம் ெ-ாடங்கியது.
இதையொட்டி அன்றைய தினம் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் மூலவரான சவுந்தரநாயகி அம்மன் மற்றும் அனந்தீஸ்வரருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
இதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகளும் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டனர். பின்னர் மேளதாளம் முழங்க உற்சவ மூர்த்திகள் கொடிகம்பத்தின் அருகே கொண்டுவரப்பட்டனர். அங்கு கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குருக்கள் மந்திரங்கள் ஓத கொடிமரத்தில் வைகாசி விசாகத்துக்கான கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மகாமேரு தெருவடைச்சான் உற்சவமும், 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலையில் விநாயகர், முருகர், சவுந்தரநாயகி அனந்தீஸ்வரர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர் ஆகிய 5 தேர்களை ஒரே நேரத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.