ஆன்மிகம்
தொங்குட்டிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தொங்குட்டிபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தில் மிகப்பழமையான விநாயகர், மாகாளியம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் திருப்பணிகள் நடந்தன. இதில் கோவில் கோபுரங்களுக்கு வண்ணங்கள் தீட்டி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அன்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 6.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித கலசங்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க காலை 7 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் சாமி தரிசனம்செய்தனர். அதனை தொடர்ந்து விநாயகர், மாகாளியம்மன் மற்றும் காமாட்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.