ஆன்மிகம்

மகாளயத்தை எப்படிச் செய்யலாம்?

Published On 2017-09-14 15:29 IST   |   Update On 2017-09-14 15:30:00 IST
மகாளயபட்சத்தில் தாய், தந்தையருக்கு வருடா வருடம் செய்யும் சிராத்தம் நேர்ந்தால், சிராத்த நாளன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப் பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தைச் செய்ய வேண்டும்.
மகாளயத்தை 1. பார்வணம், 2.ஹிரண்யம், 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1. பார்வணம் என்பது ஆறு பிராமணர்களை (பித்ருக்களாக) கருதி, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, பிராமணர்களுக்கு சாப்பாடு போடுவது.

2. ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது.

3. தர்ப்பணம் என்பது தானாகவே அமாவாசைபோல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் மகாளய பட்சம் நாட்களில் கட்டாயம் தனது பித்ருக்களுக்கு உரிய கடமைகளை செய்து நமது பணியை நிறைவேற்ற வேண்டும்.

ஏதாவது ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள், மகாபரணீ (10.9.17 ஞாயிறு), மத்யாஷ்டமீ (13.9.17 புதன்), மஹாவ்யதீபாதம் (14.9.17 வியாழன்), கஜச்சாயா (17.9.17 ஞாயிறு) ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

கன்னியாக மரணம் அடைந்தவர்களுக்கு 17.9.17 ஞாயிறு அன்றும், விபத்துகளால் அகால மரணம் அடைந்தவர்களுக்கு 18.9.17 திங்கள் அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் பிரம்மசாரி செய்யும் மகாளயத்தை 19.9.17 செவ்வாய் அமாவாசை அன்றும் செய்யலாம். மற்றவர்கள் யாரும் 18.9.17 சதுர்தசீ மற்றும் 19.9.17 அமாவாசையன்று மகாளயம் செய்யக்கூடாது.

மகாளயபட்சத்தில் தாய், தந்தையருக்கு வருடா வருடம் செய்யும் சிராத்தம் நேர்ந்தால், சிராத்த நாளன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப் பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தைச் செய்ய வேண்டும்.

இந்த பட்சத்தில் மகாளயம் செய்ய முடியாதவர்கள் அடுத்த தேய்பிறை பட்சத்தில் (2017 அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 19-ந்தேதிக்குள்) செய்யலாம்.

Similar News