ஆன்மிகம்
திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது.
திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைப்பதுடன் மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம்.
இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால், குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.
மஞ்சள் அரைத்துத் தடவி பல நோய்கள் குணமாவதை மருத்துவர்கள் எடுத்துரைப்பர். அதற்காகத் தான் முன்காலத்தில் பெண்கள், முகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு புது ஆடை வாங்கி அணியும் பொழுது, அதன் நுனியில் மஞ்சள் தடவி அணிந்தால் வஸ்திர பஞ்சம் ஏற்படாது.