ஆன்மிகம்

தாமிரபரணி புஷ்கரம்: பாபநாசத்தில் கோலாகலம்

Published On 2018-10-13 11:06 IST   |   Update On 2018-10-13 11:06:00 IST
பாபநாசத்தில் உள்ள 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர தீப ஆரத்தி பெருவிழா அக்டோபர் 4 முதல் 22 வரை நடைபெறுகிறது.
பாபநாசத்தில் உள்ள 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர தீப ஆரத்தி பெருவிழா அக்டோபர் 4 முதல் 22 வரை நடைபெறுகிறது. சித்தர்கள் கோட்டம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் இந்த புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சிவனடியார்களை கொண்டு தமிழ் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்.

வரும் அக்டோபர் 3-ந்தேதி இரவு பொதிகை மலையில் வசிக்கும் காணிக்கார சமூகத்தினர் நடத்தும் சாத்துப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி தாமிரவருணிக்கு தீப ஆரத்தி விழா, கால்கோள் விழா ஆகியவை அனைத்து சமுதாயத் தலைவர்கள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

மேலும் காலை 8 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு ஆகியவையும், காலை 10.30 மணிக்கு தாமிரவருணி நதியின் உற்பத்தி வரலாறு பற்றிய ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்த பகுதியில் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு தாமிரவருணி சகஸ்ரநாம பாராயண வழிபாடும், தீப ஆரத்தியும் நடைபெறுகிறது.

அக்டோபர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல், 6-ந் தேதி காலை 10.30 மணிக்கு தேவாரம் முற்றோதுதல், 7-ந்தேதி மாலை 5 மணிக்கு ஆதிபராசக்தி மன்றம் சார்பில் தீப வழிபாடு, 8-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு விக்கிரமசிங்கபுரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் நடத்தும் ஐயப்பன் வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

9-ந்தேதி காலை 10.30 மணிக்கு அருட்பா பாராயணம், 10-ந் தேதி காலை 10.30 மணிக்கு தாமிரவருணி நதி பற்றிய கவியரங்கம், ஓவியப் போட்டி, மாலை 6 மணிக்கு ராமபூதத்தான் தெய்வீக கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது. அக்டோபர் 11-ந்தேதி காலை 7.30 மணியளவில் புனித தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில் இருந்து அடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து நதிக்கு வழிபாடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்றைய தினம் மாலை 6.15 மணியளவில் பஞ்சபூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இதை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக் கவுள்ளார்.

12-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி பெருவிழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும், 13-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் நீதியரசர்கள் மற்றும் வக்கீல்களும், 14-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் உலக தமிழ் வர்த்தக குழுவினரும், 15-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் பங்கேற்கிறார்கள்.

16-ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், 17-ந்தேதி நடைபெறும் விழாவில் இந்து முன்னணி பிரதிநிதிகள் என ஒவ்வொரு நாளிலும் பல்வேறு தரப்பினர் பங்கேற்கிறார்கள். புஷ்கர விழாவை சிறப்பாக நடத்துவதற்காக 400 தன்னார்வத் தொண்டர்களை நியமித்திருக்கிறோம். இவர்கள் 27 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25--க்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு மாநிலத்தவர்க ளுக்கு உதவும் வகையில் பல மொழிகளை பேசக்கூடியவர்கள். இதுதவிர சாதுக்கள், பொதுமக்கள் என அனைவரையும் தங்க வைப்பதற்காக 13 திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். அந்த மண்டபங்களில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் நெய் தீப ஆரத்தி மட்டுமே நடைபெறும். பூஜைக்காக பூக்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. அதனால் நதி மாசடைய வாய்ப்பில்லை என்கின்றனர் விழா குழுவினர்.
Tags:    

Similar News