ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு 1000 பால்குட ஊர்வலம்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் புற்றுருவில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள மாரியம்மன் இக்கோவிலுக்கு வருகிற 12-ந் தேதி 1000 பால்குட ஊர்வலம் நடக்கிறது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் புற்றுருவில் அன்னை சுயம்புவாக எழுந்தருளிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வருகிற 12-ந் தேதி 1000 பால்குட ஊர்வலம் நடக்கிறது. அன்று காலை 7.45 மணிக்கு தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு செல்கிறார்கள். நாதஸ்வர இசை மற்றும் வாணவேடிக்கையுடன் ஊர்வலம் மதியம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்ததும் 1 மணிக்கு மாரியம்மனுக்கு 1000 பால்குட அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடக்கிறது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது.
முன்னதாக தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீ அம்பாள் வெள்ளி திருமுகத்துக்கு வருகிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தினமும் காலை வேத பாராயணமும், மாலையில் சகஸ்ர நாம அர்ச்சனையும், 9-ந் தேதி காலை 7 மணிக்கு மகா சண்டிஹோமமும் கஞ்சி வார்த்தலும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பிரம்மணாள் கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.