ஆன்மிகம்

பால்வண்ணநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2019-04-04 11:15 IST   |   Update On 2019-04-04 11:15:00 IST
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவில்களில், கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மன் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரமோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதல் உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Similar News