ஆன்மிகம்

குறுக்குத்துறை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது

Published On 2019-05-09 08:33 GMT   |   Update On 2019-05-09 08:33 GMT
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனால் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

மேலும் விசாகத்தன்று முருகனுக்கு புஷ்பகாவடி, இளநீர் காவடி எடுத்து சென்று இளநீரால் அபிஷேகம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக் கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும். வைகாசி விசாக திருவிழா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா வருகிற 18-ந்தேதி நடக் கிறது.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு ஹோமமும், கும்ப பூஜையும் நடந்தது.

பகல் 11 மணிக்கு சுப்பிரமணியருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம் சாத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகாசி விசாக திருவிழா 18-ந்தேதி நடக்கிறது. அன்று சுப்பிரமணியருக்கு தங்க கவசம் சாத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News