ஆன்மிகம்
பவானி சங்கமேஸ்வரர் கோவில் பக்தர்களின்றி வெறிச்சோடியது
பவானி கூடுதுறையில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் ஊரடங்கு உத்தரவால் திறக்கப்படாததால் பக்தர்கள் யாருமின்றி கோவில் வளாகம், கூடுதுறை பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.
பவானி கூடுதுறையில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதில் ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, புரட்டாசி மாத அமாவாசை போன்ற நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அமாவாசை தினத்தில் கூடுதுறையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த கோவிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திதி கொடுக்க வருவார்கள். இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவிலின் நடை அடைக்கப்பட்டு உள்ளது.
கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் யாருமின்றி கோவில் வளாகம், கூடுதுறை பகுதி வெறிச்சோடி கிடக்கிறது. மேலும், கோவில் நடை அடைக்கப்பட்டாலும் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் உள்பட குருக்கள் தினமும் 5 வேளை பூஜை செய்கிறார்கள்.