ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் திறக்கப்படுவது எப்போது?

Published On 2020-06-08 11:59 IST   |   Update On 2020-06-08 11:59:00 IST
வழிபாட்டு தலங்களை திறக்க மத்தியஅரசு அனுமதி கொடுத்தாலும் அந்தந்த மாநிலங்கள் எடுக்கும் முடிவுகளின்படி வழிகாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தொல்லியல்துறை அதிகாரி தெரிவித்தார்.
நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை இன்று(திங்கட்கிழமை) முதல் திறக்க மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் வழிபாட்டு தலங்களுடன் கூடிய நினைவு சின்னங்கள் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படுகிறது.

தஞ்சை பெரியகோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ஆகியவை தொல்லியல்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த கோவில்கள் இன்று திறக்கப்படவில்லை. தமிழகஅரசிடம் இருந்து எந்தவித அனுமதியும் வராததால் கோவில் திறக்கப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொல்லியல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, வழிபாட்டு தலங்களை திறக்க மத்தியஅரசு அனுமதி கொடுத்தாலும் அந்தந்த மாநிலங்கள் எடுக்கும் முடிவுகளின்படி வழிகாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகஅரசிடம் இருந்து அனுமதி வந்த பிறகு கோவில்கள் திறக்கப்படும் என்றார்.

Similar News