ஆன்மிகம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

கொரோனா ஊரடங்கு: கோவில்களில் களையிழந்த பிரதோ‌ஷ விழா

Published On 2021-06-22 12:03 IST   |   Update On 2021-06-22 18:54:00 IST
இன்று நடைபெற உள்ள பிரதோ‌ஷ விழாவிற்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவொற்றியூர் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த விழா ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்களின் போது 100 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோ‌ஷ விழா எப்பொழுதும் வெகு சிறப்பாக நடத்தப்படும். ஆனால் இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் https://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற ‘யூடியூப்’ சேனலில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News