ஆன்மிகம்
அருள்மிகு சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர்

வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-06-28 12:55 IST   |   Update On 2021-06-28 12:55:00 IST
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. காலை 6.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

வடபழனியில் அருள்மிகு சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அரசு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்களுக்கு அர்ச்சனை, பிரசாதம் வழங்கப்படவில்லை.

என்ன தான் வீட்டில் வழிபாடு செய்தாலும் கோவிலில் வழிபாடு செய்யும் போது பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதாக சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தெரிவித்தனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News