ஆன்மிகம்
வடபழனி முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

வடபழனி முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-06-29 12:15 IST   |   Update On 2021-06-30 12:37:00 IST
இன்று செவ்வாய் கிழமை என்பதால், முருகன் கோவில்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை

ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்  கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று இந்த மாவட்டங்களில் மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளிலும் வழிபாடு நடைபெற்றது. நேற்று காலையில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ததால், கோவில்களில் அதிகம் கூட்டம் இல்லை.

இந்த நிலையில் இன்று  செவ்வாய் கிழமை என்பதால், முருகன் கோவில்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள
வடபழனி
, கந்தகோட்டம் முருகன்  கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர். மற்ற கோவில்களில் கூட்டம் குறைவாக இருந்தது. கொரோனா காலத்தில் கோவில்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் பலர் திருமணம் செய்து கொண்டனர்.



வடபழனிகோவில் முன்பும் ஊரடங்கு நேரத்தில் முகூர்த்த நாட்களில் அதிக திருமணங்கள் நடைபெற்றது. இதுபோன்று திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இதுபோன்ற தம்பதிகள் இன்று காலையில் வடபழனி முருகனை தரிசிப்பதற்காக காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் பயபக்தியோடு சாமி கும்பிட்டனர்.

அதே போன்று இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் வயதானவர்களும் சாமி கும்பிட கோவிலுக்கு வந்திருந்தனர். கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள  நிலையில்  சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வரிசையில் நின்று இன்று சாமி கும்பிட்டனர். பக்தர்கள்  கைகளை சுத்தம் செய்வதற்கு கோவில் நுழைவாயிலில் சானிடைசர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதனை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பிறகே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News