வழிபாடு

குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2023-01-27 12:03 IST   |   Update On 2023-01-27 12:03:00 IST
  • இந்த விழா பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
  • 2-ந்தேதி காணிக்கை அன்னையின் சப்பர பவனி நடக்கிறது.

குளச்சலில் புனித காணிக்கை அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி வரை நடக்கிறது.

விழாவையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு கல்லறை தோட்டத்தில் முன்னோர் நினைவுத் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். அருட்பணியாளர் செல்வராஜ் கொடியேற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் கோட்டார் கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் அருட்பணியாளர் எட்வின் வின்சென்ட் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மரிய செல்வன் மறையுரையாற்றுகிறார். இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை, மாலை 6 மணிக்கு குளச்சல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் இருந்து புனித காணிக்கை அன்னையின் சப்பர பவனி மற்றும் மெழுகுவர்த்தி பவனி புறப்பட்டு திருத்தலம் சென்றடைதல், இரவு 10 மணிக்கு சிறப்பு திருப்பலி போன்றவை நடக்கிறது.

4-ந் தேதி காலையில் திருமுழுக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நடைபெறும். விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசியஸ் மரிய பென்சிகர் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறை மாவட்ட தலைமை செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள் விஜின் பிரைட், ஜாண் வினோ, டைனிசியஸ் லாரன்ஸ் மற்றும் பங்கு நிர்வாக குழுவினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்துள்ளனர்.

Similar News