வழிபாடு

8-ந்தேதி சந்திர கிரகணம்: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் 12½ மணிநேரம் மூடப்படுகிறது

Published On 2022-11-05 13:19 IST   |   Update On 2022-11-05 13:19:00 IST
  • 8-ந்தேதி சந்திர கிரகணம்: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் 12½ மணிநேரம் மூடப்படுகிறது
  • இங்கு 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி கோவில் அமைந்துள்ளது. இங்கு பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன.

சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பஞ்சவடி கோவில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 12.30 மணிநேரம் மூடப்படுகிறது. அதாவது அன்றைய தினம் அனைத்து சன்னதிகளும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கிரகண பரிகார பூஜைகள் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் மேலே குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தகவலை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News