வழிபாடு
செட்டிச்சார்விளை இயேசுவின் தூய குழந்தை தெரசா ஆலய திருவிழா கொடியேற்றம்
- திருவிழா அடுத்த மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
அழகியமண்டபம் அருகே உள்ள செட்டிச்சார்விளை இயேசுவின் தூய குழந்தை தெரசா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தக்கலை மறை மாவட்டம் ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடந்தது. அருட்பணியாளர் சகாய தாஸ் மறைவுரையாற்றினார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.