காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கொடியேற்றம்
- நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தில் புனித குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது.
- விழாவின் இறுதி நாளான 2-ந்தேதி திருவிழா திருப்பலி நடக்கிறது.
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தில் புனித குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலையில் நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி அருட்பணியாளர் அந்தோணி முத்து தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.
தூய சவேரியார் தாதியர் கல்லூரி அருள்பணியாளர் ஜெயப்பிரகாஷ் மறையுரை வழங்கினார். இரவில் அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் வருகிற 1-ந் தேதி காலை 8 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையில் திருப்பலி, திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து வழங்குதல் நடக்கிறது.
மாலையில் நற்கருணை ஆசீர், தேர்ப்பவனி நடைபெறும். விழாவின் இறுதி நாளான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு அம்சி அருட்பணியாளர் காட்வின் சவுந்தரராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அன்பின் விருந்து மற்றும் மறைகல்வி மன்ற ஆண்டுவிழா கலைநிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளர்கள், ஆலய பங்குமக்கள், பங்கு அருட்பணிபேரவை, அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.