வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-11-24 11:24 IST   |   Update On 2022-11-24 11:24:00 IST
  • பக்தர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
  • கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள் மூலமாக சமயபுரம் வந்தனர். தொடர்ந்து, அவர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இந்தநிலையில் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பிய பக்தர்களை ஏற்றி செல்வதற்காக அரசு மற்றும் தனியார் பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. இதனிடையே அதிக அளவு பெண்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்த அரசு பஸ் டிரைவர்கள் சிலர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் கடைவீதியில் நின்று பயணிகளை ஏற்றக்கூடாது, பழைய பஸ் நிலையம் அருகே சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து பஸ்களும் சமயபுரம் பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News