வழிபாடு
பாலவிளை புனித சவேரியார் ஆலய அர்ச்சிப்பு விழா நாளை நடக்கிறது
- நாளை மதியம் 2.30 மணிக்கு ஆயர்களுக்கு வரவேற்பு நடக்கிறது.
- 6 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.
கொல்லங்கோடு அருகே உள்ள பாலவிளையில் (காட்டுக்கடை) மலங்கரை கத்தோலிக்க திருச்சபை சார்பில் புனித சவேரியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மதியம் 2.30 மணிக்கு ஆயர்களுக்கு வரவேற்பு, 3 மணிக்கு ஆலய அர்ச்சிப்பு, மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம், 6 மணிக்கு அன்பின் விருந்து போன்றவை நடக்கிறது.
விழாவில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக திருவனந்தபுரம் உயர் மறை மாநில துணை ஆயர் மாத்யூஸ் மார் போளிகார்ப்பஸ், ஆயர் ஆன்டனி மார் சில்வானோஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அலெக்ஸ் குமார், ஒருங்கிணைப்பாளர் இவான்ஸ், செயலாளர் ஜெபல் சிங், பொருளாளர் அசோகராஜ், பங்கு பேரவை, பொதுக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.