வழிபாடு
சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை
- மூலவர் மற்றும் உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பித்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நேற்று 2-வது ஆண்டாக ஏகதின வில்வ லட்சார்ச்சனை மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் லட்ச வில்வார்ச்சனை தொடங்கியது.
தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மீண்டும் மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரையிலும் லட்ச வில்வார்ச்சனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு கோவில் அர்ச்சகர்கள் மூலவர் மற்றும் உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பித்தனர்.
மாலை 6 மணியளவில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்ச வில்வார்ச்சனை பூஜையில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.