வழிபாடு

கோவில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்...

Published On 2023-06-28 14:08 IST   |   Update On 2023-06-28 14:08:00 IST
  • தெய்வ வழிபாட்டில் மிக சுலபமான வழி பிரதட்சணம் செய்வது ஆகும்.
  • கோவில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

தெய்வ வழிபாட்டில் மிக சுலபமான வழி பிரதட்சணம் செய்வது ஆகும். இதையே வலம் வருதல், சுற்றி வருதல், என்றும் கூறுவார்கள்.

ஆலயங்களில் நாம் பிரதட்சணம் செய்யும் பொழுது நாம் வைக்கும் ஒவ்வொரு காலடியும் முன் ஜன்மங்களில் நாம் செய்த பாபங்களை விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம்.

எல்லோரும் 3 முறை தானே சுற்றுகின்றனர். நாமும் 3 முறை சுற்றினால் போதும் என்று நினைத்துச் சுற்றி வருதல் கூடாது. கோவில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் என்ற முழு விவரத்தை சரியாக நாம் தெரிந்து கொண்டு சுற்றி வருவது அவசியம்.

ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.

மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.

ஐந்து முறை சுற்றி வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.

ஏழு முறை வலம் வந்தால் நினைத்த காரியம் ஜெயமாகும்.

ஒன்பது முறை வலம் வருவதால் (சத்துருநாசம்) எதிரிகள் விலகுவர்.

பதினொரு முறை சுற்றினால் ஆயுள் விருத்தியாகும்.

பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் சித்தியாகும்.

பதினைந்து முறை வலம் வந்தால் தன பிராப்தி உண்டாகும்.

பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும். விவசாயம் செழிக்கும்.

பத்தொன்பது முறை சுற்றி வலம் வந்தால் ரோகம் நிவர்த்தியாகும்.

இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.

இருபத்தி மூன்று முறை சுற்றினால் சுக சவுகரியத்துடன் வாழ்வு கிட்டும்.

நூற்றியெட்டு முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இருநூற்று எட்டு முறை சுற்றினால் யாகம் செய்த பலன் கிடைக்கும்.

Tags:    

Similar News