வழிபாடு
வருடாந்திர தெப்போற்சவம் 2-வது நாள்:ருக்மணி, கிருஷ்ணர் 3 சுற்றுகள் பவனி
- மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தேரில் உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- பக்தர்கள் கிருஷ்ணா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 6 மணியளவில் உற்சவர்களான ருக்மணி சமேத கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட, மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தேரில் உற்சவர்கள் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.