வழிபாடு
- இவரை நகரின் காவல் தெய்வம் என்றும் சொல்லலாம்.
- அனுமனை ராணி மங்கம்மாள் வழிபட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் சென்னையின் நுழைவாயிலான கிண்டியில், எம்.கே.என். சாலையில், மாங்குளம் அருகில் உள்ளது.
வியாசராஜரால் நிறுவப்பட்ட இந்த ஆஞ்சநேயர், சென்னையின் நுழைவாயிலில் இருப்பதால் இவரை நகரின் காவல் தெய்வம் என்றும் சொல்லலாம்.
இந்த அனுமனை ராணி மங்கம்மாள் வழிபட்டதாக கூறப்படுகிறது.
இவருக்கு வெண்ணைக்காப்பு சாத்தி வேண்டிக் கொண்டால் தீராத நோய்தீரும். கல்யாண வரம் வேண்டுவோர் ஒன்பது வியாழக்கிழமை இவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வலம்வர கெட்டிமேளம் கொட்டுவது நிச்சயம் என்கிறார்கள்.