தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்.... ஆகாத எண்ணெய்....
- தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் முக்கியத்துவம் வாய்ந்தது.
- எந்த எண்ணெய் தீபம் ஏற்ற உகந்தது என்று அறிந்துகொள்ளலாம்.
கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.
இறைவனுக்கு உகந்த எண்ணெய் விபரம் வருமாறு:-
மகாலட்சுமிக்கு - நெய்
திருமால், சர்வ தேவதைகளுக்கு - நல்லெண்ணெய்
விநாயகருக்கு - தேங்காய் எண்ணெய்
சிவபெருமானுக்கு - இலுப்பை எண்ணெய்
அம்பாளுக்கு -நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.
தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்
பசு நெய்:- லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.
நல்லெண்ணெய்:- பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.
தேங்காய் எண்ணெய்:- லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.
இலுப்பை எண்ணெய்:- எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.
விளக்கெண்ணெய்:- தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.
வேப்ப எண்ணெய்:- குலதெய்வ அருள் கிடைக்கும்.
மூவகைஎண்ணெய்- நெய், வேப்பஎண்ணை, இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.