வழிபாடு

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எல்லாமே ஐந்து

Published On 2022-07-11 14:16 IST   |   Update On 2022-07-11 14:16:00 IST
  • இந்தக் கோவிலில் எல்லாமே 5 ஆக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
  • 5 கோபுரங்கள், தினசரி 5 வழிபாடுகள், 5 தீர்த்தங்கள் என்று அமைய பெற்றுள்ளது.

விருத்தகிரீஸ்வரர் திருத்தலத்தின் புராணப் பெயர் 'திருமுதுகுன்றம்' என்பதாகும். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில், 9-வது தலம் இதுவாகும். இந்தக் கோவிலில் எல்லாமே 5 ஆக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். அதாவது 5 கோபுரங்கள், தினசரி 5 வழிபாடுகள், 5 தீர்த்தங்கள் என்று அமைய பெற்றுள்ளது. இதை தவிர்த்து மேலும் 5 ஆக அமைய பெற்றுள்ளது பற்றி பார்ப்போம்:-

பஞ்சமூர்த்திகள்

* விநாயகர்

* முருகர்

* சிவபெருமான்

* சக்தி (அம்மன்)

* சண்டிகேஸ்வரர்

இறைவனின் திருநாமம்

* விருத்தகிரீஸ்வரர்

* பழமலைநாதர்

* விருத்தாசலேஸ்வரர்

* முதுகுன்றீஸ்வரர்

* விருத்தகிரி

கோபுரங்கள்

* கிழக்கு கோபுரம்

* வடக்கு கோபுரம்

* மேற்கு கோபுரம்

* தெற்கு கோபுரம்

* கண்டராதித்தன் கோபுரம்

நந்தி

* இந்திர நந்தி

* வேத நந்தி

* ஆத்ம நந்தி

* மால்விடை நந்தி

* தர்ம நந்தி

விநாயகர்

* ஆழத்துப் பிள்ளையார்

* மாற்றுரைத்த விநாயகர்

* முப்பிள்ளையார்

* தசபுஜ கணபதி

* வல்லப கணபதி

ஈசனை வழிபட்டோர்

* உரோமச முனிவர்

* விபசித்து முனிவர்

* குமார தேவர்

* நாதசர்மா

* அனவர்த்தினி

திருச்சுற்று

* தேரோடும் திருச்சுற்று

* கயிலாய திருச்சுற்று

* வன்னியடி திருச்சுற்று

* அறுபத்து மூவர் திருச்சுற்று

* பஞ்சவர்ண திருச்சுற்று

மண்டபங்கள்

* இருபது கால் மண்டபம்

* இடைகழி மண்டபம்

* தபன மண்டபம்

* மகா மண்டபம்

* இசை மண்டபம்

Tags:    

Similar News