கால்பந்து

பிரிமீயர் லீக் அட்டவணை வெளியீடு: தொடக்க போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்

Published On 2024-06-18 12:25 GMT   |   Update On 2024-06-18 12:25 GMT
  • ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் மே மாதம் 25-ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
  • நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் போட்டியில் செல்சி அணியை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்தில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் பிரிமீயர் லீக். இந்த தொடரின் 2024-25 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போட்டி ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனெடெட், புல்ஹாம் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி 18-ந்தேதி செல்சி அணியை எதிர்கொள்கிறது, லிவர்பூல் 17-ந்தேதி இப்ஸ்விச் அணிக்கெதிராக விளையாடுகிறது. சனிக்கிழமையான அன்று ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மே 25-ந்தேதி வரை பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெறும். இதில் 20 அணிகள் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தங்களுடைய மைதானத்தில் (Home Ground) ஒருமுறை, எதிரணி மைதானத்தில் (Away Ground) ஒருமுறை என இரண்டு முறை மோத வேண்டும். லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

2023-24 சீசனில் மான்செஸ்டர் சிட்டி 28 வெற்றிகள், 7 டிரா, 3 தோல்விகள் மூலம் 91 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது. அர்செனல் 28 வெற்றி தலா 5 டிரா, தோல்விகள் மூலம் 89 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

லிவர்பூல் (82), 3-வது இடத்தையும், அஸ்டோன் வில்லா (68) 4-வது இடத்தையும், டோட்டன்ஹாம் (66) 5-வது இடத்தையும் பிடித்தன. மான்செஸ்டர் யுனைடெட் 60 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தது.

Tags:    

Similar News