பொது மருத்துவம்

உடலில் வைட்டமின் டி குறைந்தால் என்ன ஆகும்?

Published On 2024-12-10 08:57 GMT   |   Update On 2024-12-10 08:57 GMT
  • எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது.
  • வைட்டமின் டி புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றது.

வைட்டமின் டி இருந்தால் தான் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது. வயதானவர்களுக்கு எலும்பு முறிவு எளிதாக ஏற்படவும் காரணமாகின்றது.

மேலும் இந்த வைட்டமின் டி குறைபாடானது, வைட்டமின் டி புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.


வைட்டமின் டி , டுனா, சார்டைன்ஸ், கார்ட்லிவர் ஆயில், காளான், இறால் போன்ற உணவுப்பொருட்களில் கிடைக்கிறது. பால் பொருட்களான செறிவூட்டப்பட்ட பால், தானியங்கள், ஓட்ஸ் , தயிர் மற்றும் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு பழச்சாற்றில் காணப்படுகின்றது.

வைட்டமி டி குறைபாட்டின் அறிகுறிகள்

அதிகப்படியான உடல் சோர்வு , வேலையில் கவனமின்மை, சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு உண்டாவது.

மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புத்தேய்மானம் போன்றவை வைட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறிகளாகும்.


சூரிய ஒளி குறைவான இடங்களில் அதிக நேரம் வேலை செய்வது, அளவுக்கதிகமான சன் ஸ்க்ரீன் பயன்பாடு மற்றும் அதிகளவு மெலனின் உற்பத்தியுள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகின்றது.

உயரமான கட்டடங்களில் சூரிய ஒளி கிடைக்காத இடங்களில் அதிக நேரம் இருப்பதும் வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கும். 

Tags:    

Similar News