செய்திகள்
ஜெயலலிதா முன்னிலையில் கருப்பசாமி பாண்டியன், ஞானசேகரன் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
முதல்-அமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் மற்றும் த.மா.கா.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வேலூர் ஞானசேகரன் ஆகியோர் அ.தி.மு.கவில் இன்று இணைந்தனர்.
சென்னை:
முதல்-அமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் மற்றும் த.மா.கா வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வேலூர் ஞானசேகரன் ஆகியோர் அ.தி.மு.கவில் சேர்ந்தனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை இன்று (26-ந்தேதி) திருநெல்வேலி மாவட்டம், தி.மு.க -வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. கருப்பசாமி பாண்டியன் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
முதல் -அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி. ஞானசேகரன் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த வேலூர் மாநகராட்சி 34-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே. சீனிவாசகாந்தி, தென் சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் இ.சி சேகர் உள்ளிட்ட வேலூர், சென்னை, திருவள்ளூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்பட 70 பேர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
த.மா.கா வில் இருந்து விலகி கட்சியில் இணைந்தவர்களை ஜெயலலிதா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
கருணை உள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டதற்காக, முதல்- அமைச்சருக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக்கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவில் இணைந்தது குறித்து ஞானசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.மா.காவை ஜி.கே.வாசன் கார்பரேட் நிறுவனம் போல நடத்தி வருகிறார். எந்த கூட்டம் நடத்தினாலும் அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறினோம். அவர் அந்த கூட்டணியே தொடர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருகிறார்.
கட்சி தொடங்கிய 9-வது மாதத்தில் இருந்து தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்ணி சேருவோம் என்று ஜி.கே வாசன் கூறி வந்தார். அ.தி.மு.க சார்பில் 25,15 சீட் தருவதாக கூறிய அவர் கடைசியில் 5 சீட்டுதான் கொடுப்பதாக கூறியதால் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்ததாக காரணம் கூறினார்.
நான் தேர்தலில் போட்டியிட்டு 4 முறை எம்.எல்.ஏ வாக பணியாற்றி உள்ளேன். அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற வேட்பாளர் என்ற சிறப்பும் எனக்கு இருந்தது.
ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.