செய்திகள்
உடுமலையில் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

மாணவர் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2017-05-31 13:51 IST   |   Update On 2017-05-31 13:51:00 IST
மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சியில் சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
உடுமலை:

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உடுமலை பஸ் நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசினார்.

மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது ஆகும். மாட்டிறைச்சியை அனைத்து தரப்பினரும் சாப்பிடுகிறார்கள். இந்த பிரச்சனையில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சியில் சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.


மாடுகளை விற்க தடையை மத்திய அரசு திரும்ப பெறும் வரை த.மா.கா. சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவை தங்கம், விடியல் சேகர், மாநில துணை தலைவர் ஈரோடு ஆறுமுகம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேலு, வடக்கு மாவட்ட தலைவர் சண்முகம், திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாவட்ட தொழிற்சங்கம் தனசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் யு.கே.பி.முத்து குமாரசாமி, உடுமலை நகர செயலாளர் பாலகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் அருளானந்தம், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News