செய்திகள்

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Published On 2017-06-24 13:06 IST   |   Update On 2017-06-24 13:06:00 IST
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். 2016-ம் ஆண்டு அவருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மத்திய உள்துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு பரோல் வழங்க முடியாது என்று அரசு கூறி வருகிறது. எனவே பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இதே பிரச்சனையை குறித்து பேச கருணாஸ், தனியரசு ஆகியோர் அனுமதி கேட்டனர்.

சபாநாயகர்:- இதுகுறித்து நீங்கள் கொடுத்த கடிதம் பரிசீலனையில் உள்ளது. பின்னர் அதுபற்றி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News