செய்திகள்

நீட் தேர்வு மையம் அமைக்க தமிழகத்தில் இடம் இல்லையா? டி.டி.வி.தினகரன்

Published On 2018-05-06 13:41 IST   |   Update On 2018-05-06 14:10:00 IST
நீட் தேர்வு மையம் அமைக்க தமிழகத்தில் இடம் இல்லையா? என்று டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #NEET2018 #NEETExam #TTVDhinakaran

மதுரை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி.தினகரன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அனைத்து விசயங்களிலும் மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது. 2-ம் தர குடிமகன் போல் மத்திய அரசு தமிழகத்தை நடத்துகிறது.

நீட் தேர்வு வெளி மாநிலத்தில் நடத்தப்படும் என்று பத்திரிகைகளில் 15 நாட்களுக்கு முன்பு வந்தபோதே நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்தேன்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து சோமாலியா நாட்டை போன்று ஆக்கப்பார்க்கிறார்கள். நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு எல்லாம் இடம் உள்ளது.

ஆனால் நீட் தேர்வு மையம் அமைக்க மட்டும் தமிழகத்தில் இடமில்லையா? எஸ்.வி.சேகரை உயர் நீதிமன்றம் கைது செய்ய சொல்லியும் தமிழக அரசு தயங்குகிறது என்றால் அவர் பி.ஜே.பி.காரர் என்ற காரணமே. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் பதவியையும், அரசையும் மட்டுமே காப்பாற்ற முயல்கிறார்கள் இது மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். #NEET2018 #NEETExam #TTVDhinakaran

Similar News