இந்தியா
சிறுவனின் காயத்திற்கு Feviquick தடவிய நர்ஸ்
- காயமடைந்த சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக சென்றான்.
- அங்கு பணியில் இருந்த நர்ஸ் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பினார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹவேரி அருகிலுள்ள அடூர் ஆரம்ப சுகாதார மையத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக சென்றான். அங்கு பணியில் இருந்த நர்ஸ் சிறுவனின் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பியுள்ளார்.
வீடு திரும்பிய சிறுவனிடம், நடந்தது குறித்து அவன் பெற்றோர் விசாரித்தனர். சிறுவன் நடந்ததைக் கூறினான்.
இதுதொடர்பாக பெற்றோர் நர்சிடம் விசாரித்தனர். அப்போது, தையல் போட்டால் குழந்தையின் கன்னத்தில் தழும்பு ஏற்படும் என்பதால் பெவிகுயிக் தடவினேன் என கூறினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து, நர்சை பணியிடமாற்றம் செய்து ஹவேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.
கன்னத்தில் காயமடைந்த சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுயிக் தடவிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.