செய்திகள்
ஃபோக்ஸ்வேகன் பிக் ரஷ் திருவிழா துவங்கியது
ஃபோஸ்க்வேன் நிறுவனத்தின் 72 மணி நேர பிக் ரஷ் விற்பனை திருவிழா துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
மும்பை:
பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் 72 மணி நேர "தி பிக் ரஷ்" திருவிழாவை துவங்கியுள்ளது. இன்று துவங்கிய திருவிழா நவம்பர் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிக் ரஷ் திருவிழாவில் வாடிக்கையாளர்களுக்கு போலோ, அமியோ மற்றும் வென்டோ உள்ளிட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம், கவர்ச்சிகர எக்சேஞ்ச், லாயல்டி மற்றும் சர்வீஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாடலுக்கும் பிரத்யேக சலுகைகள், தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு 10 சதிவிகிதம் வரை தள்ளுபடி, மாடல்களை வாங்கும் போதும், டெஸ்ட் டிரைவ் செய்யும் போதும் நிச்சய பரிசு வழங்கப்படுவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. இத்துடன் சர்வீஸ் செய்யும் போதும் சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி ஃபோக்ஸ்வேகன் விற்பனை மையங்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் ரஷ் 72 மணி நேர திருவிழா பிரின்ட், ரேடியோ மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களின் மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது.