GOLD PRICE TODAY : வார இறுதியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.
தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-02-2025- ஒரு கிராம் ரூ.108
13-02-2025- ஒரு கிராம் ரூ.107
12-02-2025- ஒரு கிராம் ரூ.107
11-02-2025- ஒரு கிராம் ரூ.107
10-02-2025- ஒரு கிராம் ரூ.107