வணிகம் & தங்கம் விலை
null
அதலபாதாளத்தில் பங்குச்சந்தை.. ஆரம்பமே இப்படியா!.. சென்செக்ஸ் - நிஃப்டி எவ்வளவு?
- ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
- கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 17) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22,800 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் 9வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.