null
பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்.. அடிவாங்கிய சென்செக்ஸ் - நிஃப்டி!
- 8 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்ரவரி 17) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது
- ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 18) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,611 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 129 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கி 22,829 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.
பங்குச்சந்தைகள் 10வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது.
முன்னதாக 8 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்ரவரி 17) பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
டெக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, விப்ரோ, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை நிஃப்டியில் லாபம் ஈட்டி வருகின்றன.
அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎஃப்சி லைஃப், டாடா ஸ்டீல் ஆகியவை நஷ்டமடைந்தன. ஐடி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாகின்றன.