சரிவுடன் தொடங்கி ஏற்றம் கண்ட பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
- இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்டது.
- தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்தது.
பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (புதன் கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. எனினும், புளூ சிப் பேங்க் பங்குகள் மற்றும் சர்வதேச நிதி வரத்து காரணமாக உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 386.01 புள்ளிகள் சரிந்து 75,581.38 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய குறியீடான நிஃப்டி 130.45 புள்ளிகள் சரிவடைந்து 22,814.85 ஆக இருந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் சரிவுடன் காணப்பட்ட போதிலும், பி.எஸ்.இ. சென்செக்ஸ் 134.16 புள்ளிகள் அதிகரித்து 76,120.85 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.60 புள்ளிகள் அதிகரித்து 22,983.90 ஆகவும் உள்ளன.
சென்செக்ஸ்-இல் ஜொமாட்டோ, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா பேங்க், டைட்டன், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
சன் ஃபார்மா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக், நெஸ்ட்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்டவை சரிவுடன் காணப்பட்டன.