உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் உள்ள கொரோனா வார்டு.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 15 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு தயார்

Published On 2022-12-29 07:19 GMT   |   Update On 2022-12-29 07:19 GMT
  • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரேனா ெதாற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர்.
  • அரசு ஆஸ்பத்திரயில் உள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தில் 15 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது.

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த 6 மாதத்திற்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகள் முன்கூட்டியே வாங்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகரை சேர்ந்த அவர்கள் 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் விமானத்தில் வந்த 70 பேர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு கெர்ணடாட்த்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது. பொதுஇடங்களில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூகஇடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமிநாசியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரேனா ெதாற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தன்ர. நேற்று மாலை ஒருவரும், இன்று காலை ஒருவரும் என குணமடைந்து வீடு திரும்பினர்.

ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்யசயில் உள்ளார். இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரயில் உள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தில் 15 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களும் தயார்நிலையில் உள்ளனர்.

மருத்துவர்கள் , பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News