உள்ளூர் செய்திகள்
தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
- கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமாகினர்
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ஐஸ்கூல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் விமலா(20). இவர் பி.காம் முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள மருத்து கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது அம்மா செல்லத்தாய் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தேவதானப்பட்டி 15-வது வார்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் சந்தனேஸ்வரி(19). இவர் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருகில் இருந்த கடைக்கு சென்ற சந்தனேஸ்வரி மாயமானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.