உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2022-07-02 09:31 IST   |   Update On 2022-07-02 09:31:00 IST
  • தேனி அருகே குடும்ப பிரச்சினையால் 2 பெண்கள் மாயமாகினர்.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி அழகுராணி (வயது23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அழகுராணி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி போலீஸ் லைன் பின்புறம் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி பிரியா (28). குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து பிரியா மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News