உள்ளூர் செய்திகள்
அடிதடி வழக்கு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
- கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவு.
- இந்த நிலையில் தனிப்படை போலீசார் பென்னாகரத்தில் 2 பேரையும் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவான பச்சபட்டியைச் சேர்ந்த திருப்பதி (வயது 37), செந்தில்குமார் (34) ஆகிய இருவரையும் கிச்சிபாளையம் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வைத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.