தேனி அருகே நர்சிங் மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
- போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த நர்சிங் மாணவி மற்றும் ஒரு பெண் மாயமானார்கள்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த பழனிவேல் மகள் மாரீஸ்வரி(17). இவர் சத்தியமங்கலத்தில் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லை எனக்கூறி சொந்தஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த மாரீஸ்வரி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருநாக்கமுத்தன்பட்டி இந்திராகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லபாண்டி மனைவி மதுபாலா(24). இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. செல்லபாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்போதுமுதல் குழந்தை அவரது தாத்தா வீட்டில் வசித்து வந்தது.
சம்வத்தன்று மதுபாலா ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசிபோட்டு வருவதாக கூறிச்சென்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை மச்சக்காளை கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.