தருமபுரியில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் மாயம்
- கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அருந்ததியர் காலணி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் பாட்டியான பொன்னி வீட்டில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து பொன்னி கொடுத்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கல்கூட அள்ளி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகுனா (வயது 29).
சம்பவத்தன்று ஆதார் திருத்தம் மேற்கொள்ள சுகுனாவை பாலக்கோடு தாலுகா அலுவலகத்திற்கு மகாலிங்கம் ஆட்டோவில் கூட்டி சென்று விட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.