உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் 2 பெண்கள் மாயம்

Published On 2023-06-02 15:49 IST   |   Update On 2023-06-02 15:49:00 IST
  • சம்பவத்தன்று வெங்கடேசன் வழக்கம்போல் கிருஷ்ணகிரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
  • வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு ஜோதி மட்டும் வெளியே சென்றதாக தெரியவந்தது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி அருகே இருளப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டில் தூங்க சென்றார். அதிகாலையில் மாது எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பல இடங்களில் தனது மகளை தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது தந்தை ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மாரண்டஅள்ளி ஜி.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி (27). இவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும், நிகிதா (3½) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் வழக்கம்போல் கிருஷ்ணகிரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் போன் எடுக்கவில்லை. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜோதி வெளியே சென்றதாக தெரிவித்தனர். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு ஜோதி மட்டும் வெளியே சென்றதாக தெரியவந்தது. உடனே அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் ஜோதி கிடைக்கவில்லை. இதனால் அவர் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து வெங்கடசேன் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோதியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News