உள்ளூர் செய்திகள்
பெரியகுளம் அருகே 2 பெண்கள் மாயம்
- தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மற்றும் அம்சாபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மாமனார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தை மனைவி பழனியம்மாள் (53). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். அதன் பிறகு மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகில் உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி பிரவீனா (24). இவர் வேலுச்சாமிக்கு 2வது மனைவியாவார். இவர்களுக்கு 1 பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.