உள்ளூர் செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்.

தென்காசி மாவட்டத்தில் பெண்களிடம் செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2023-01-16 08:26 GMT   |   Update On 2023-01-16 08:26 GMT
  • சுரண்டை அருகே உள்ள துவரங்காடு மற்றும் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவி நாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் பெண்களிடம் செயின் பறித்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
  • இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

தென்காசி:

சுரண்டை அருகே உள்ள துவரங்காடு மற்றும் திரிகூடபதி விலக்கு பகுதி மற்றும் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவி நாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் பெண்களிடம் செயின் பறித்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, கிருஷ்ணன், ஜோதிவேல் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த தொழிலாளி முப்புடாதிமுத்து (வயது28), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் குற்றாலம் அருேக உள்ள மெஞ்ஞான புரத்தில் கடந்த ஆண்டு இரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடமும், 2 பேரும் சேர்ந்து செயினை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

Tags:    

Similar News