எலவனாசூர்கோட்டை அருகே மான்களை வேட்டையாட முயன்ற 2 வாலிபர்கள் கைது
- மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே யுள்ள எலவனாசூர் கோட்டை பகுதியில் உள்ள காடுகளில் மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி எலவ னாசூர்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் எறையூர் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 2 நபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர்.
அவர்களை அழைத்தபோது, 2 பேரும் தப்பியோடினர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எறையூரை சேர்ந்த ராஜ் என்கிற அருள்ஜோதி (வயது 31), அம்புரோஸ் மகன் குறவன் என்கிற டேவில் செல்வராஜ் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் நாட்டுத் துப்பாக்கி மூலம் மான்களை வேட்டையாட முயற்சித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.