செய்திகள்
இணையதளத்தில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பதாக மோசடி செய்த வாலிபர் குண்டர்சட்டத்தில் கைது
இணையதளத்தில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பதாக மோசடி செய்த வாலிபரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
ராயபுரம்:
அயப்பாக்கததைச் சேர்ந்தவர் சரத் என்கிற கார்த்திக். பட்டதாரியான இவர் இணைய தளம் மூலம் குறைந்த விலைக்கு மொபைல், பைக் விற்பதாக கவர்ச்சி விளம்பரம் செய்தார்.
இதனை நம்பி வேலூரைச் சேர்ந்த பிரசாந்த், அரக்கோணம் கோகுல் ஆகியோர் சரத்தை தொடர்பு கொண்டனர். அப்போது ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ரூ. 10 ஆயிரத்துக்கு தருவதாக தெரிவித்தார். மேலும் சென்னை பாரிமுனைக்கு வருமாறும் கூறினார்.
இதனை நம்பி இருவரும் பாரிமுனைக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ. 20 ஆயிரத்தை சரத் பெற்றுக் கொண்டு செல்போன் வாங்கச் செல்வதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ் வழக்குப்பதிவு செய்து சரத்தை கைது செய்தார்.
விசாரணையில் அவர் குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட சரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து சரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.